அடுத்த நிலநடுக்கம்.. இந்தியாவில் தானாம்! துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த டச்சு ஆய்வாளர் பகீர் டெல்லி: துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் கணித்திருந்தார். இதற்கிடையே அடுத்த பெரிய நிலநடுக்கம் இந்தியாவில் ஏற்படக் கூடும் என்று கணித்து அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை துருக்கி நாட்டில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, மற்றும் சிரியா நாடுகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. அதன் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு, ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பல நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அங்குப் பாதிப்புகள் மிகவும் மோசமடைந்தன. துருக்கி நிலநடுக்கம் நிலநடுக்க ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இரவு நேரத்தில் அங்கு நிலவும் கடுமையான பனி மீட்புப் பணிகளுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலைய...