Posts

Showing posts with the label #Program | #Students | #Minister | #anbilmahesh #Freeequipments

மாணவர்களுக்கு இலவச திட்டம்! 10 உபகரணங்கள் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! 469170758

Image
மாணவர்களுக்கு இலவச திட்டம்! 10 உபகரணங்கள் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! “தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் 2025ஆம் ஆண்டில் கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாடப் புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.