வரலாறு காணாத அளவு.. இனி விமான கட்டணமும் உயரும்..!
வரலாறு காணாத அளவு.. இனி விமான கட்டணமும் உயரும்..! டெல்லி: வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைப் போலவே விமான போக்குவரத்துக்கு பயன்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் எனப்படும் விமான போக்குவத்து எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. விமான எரிபொருள் கடந்த பல மாதங்களாக விமான எரிபொருளின் விலை மாற்றமில்லாமல் இருந்த வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. விமான எரிபொருள் விலையை 8.5 சதவீதம் உயர்த்திய அரசு, விமான கட்டணத்தையும் விரைவில் அதிகரிக்கலாம் என அறிவித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் ஆய...