கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!
கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது! செங்குன்றத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூரில் வசித்துவரும் தம்பதியின் ஒரே மகளுக்கு 17 வயது. இவர், பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12ந்தேதி மாணவி கல்லூரிக்கு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருந்த போதிலும், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். விசாரணையில், மாணவியை செங்குன்றம், மொண்டியம்மன் நகர், நேரு தெருவைச் சார்ந்த சந்தோஷ் (18) என்ற எலக்ட்ரிஷியன் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை மீட்டனர். விசாரணையில், கல்லூரி மாணவியை சந்தோஷ் திருமண ஆசை காட்டி ஆந்திராவிற்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர், அங்குள்ள நண்பர் வீட்டில் மாணவியை தங்...