Breaking: இந்திய போர் விமானம் விபத்து! 2 பேர் பலி..1746334755
Breaking: இந்திய போர் விமானம் விபத்து! 2 பேர் பலி.. இந்திய போர் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர் விமானம் இன்று இரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவியதால் விமானம் முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.