மாணவிகள் கவணத்திற்கு! ரூ.1,000 ஊக்கத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு!!1951376627
மாணவிகள் கவணத்திற்கு! ரூ.1,000 ஊக்கத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு!! அரசுப் பள்ளியில் 6 t0 12 வகுப்பு வரை படித்த இந்த ஆண்டு மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், வரும் ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் தங்கள் பள்ளி அல்லது கல்லூரிகள் மூலம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது penkalvi.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.