குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு..1949621549
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு.. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு வரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் உடல் நலனை பாதிப்பதோடு, பொருளாதார ரீதியாக குழந்தைகளை வளர்ப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது. அதனுடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வதை வலியுறுத்தி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற கொள்கையின் அடிப்படையில் 2 குழந்தைகளுக்குப் பிறகு தாய்மார்கள், கணவர்மார்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு இழப்பீடு வழங்கி வரு...