சட்டம் ஒழுங்கு பிரச்னை! பொதுக்குழு நடத்த அனுமதிக்கக்கூடாது ஓ.பி.எஸ்156222525
சட்டம் ஒழுங்கு பிரச்னை! பொதுக்குழு நடத்த அனுமதிக்கக்கூடாது ஓ.பி.எஸ் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவடி காவல் துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.