குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு..1949621549


குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு..


குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால்  வழங்கப்படும் இழப்பீடு  உயர்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு வரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால்  அதுவே அதிக எண்ணிக்கையிலான  குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் உடல் நலனை பாதிப்பதோடு,  பொருளாதார ரீதியாக குழந்தைகளை வளர்ப்பதிலும் சிக்கல்  இருந்து வருகிறது. அதனுடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாடு  செய்வதை வலியுறுத்தி வருகிறது.   நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற  கொள்கையின் அடிப்படையில் 2 குழந்தைகளுக்குப் பிறகு தாய்மார்கள், கணவர்மார்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

 

அவ்வாறு  செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தால்,   பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. அதேபோல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையினார் பெண் உயிரிழந்தாலும் நிவாரணம் வழங்கப்படுகிறது.   குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி என்பது,  குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபிறகு  அது பலனளிக்காமல் பெண் மீண்டும் கருவுற்றால் அந்த சிகிச்சை தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு  குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தோல்வியடையும் பட்சத்தில்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 30,000  வழங்கப்படும்.  

இந்நிலையில் இழப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.   உயர்நிதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின்போது விளக்கமளித்த தமிழக அரசு,  குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ. 30,000ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.  அதேபோல்  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்துவிட்டால், வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்த்தப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.  

 

இதுகுறித்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “ குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அரசாணையைத் தாக்கல் செய்தார். குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை 60 நாட்கள் வரை இருந்தால் சிகிச்சை செலவு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.  

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl