வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?289294326


வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?


அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன.

அடுத்த மாதம் மட்டும் வார விடுமுறை நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை) 5 உள்ளது. காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி எனத் தேசிய அளவிலான பொது விடுமுறைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள வங்கிக்குச் செல்வதற்கு முன்பாக அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

- அக்டோபர் 1, 2022- வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்)

- அக்டோபர் 2, 2022- காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை

- அக்டோபர் 3, 2022- துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி)

- அக்டோபர் 4, 2022- ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை/ஜன்மோத்சவ் (அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

- அக்டோபர் 5, 2022- ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஜன்மோத்சவ்

- அக்டோபர் 6, 2022- துர்கா பூஜை (காங்டாக்)

- அக்டோபர் 7, 2022- துர்கா பூஜை (காங்டாக்)

- அக்டோபர் 8, 2022- இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபி பிறந்த நாள்) (போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)

- அக்டோபர் 9, 2022- ஞாயிறு

- அக்டோபர் 13, 2022- கர்வா சௌத் (சிம்லா)

- அக்டோபர் 14, 2022- ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்) அடுத்து வரும் வெள்ளிக்கிழமை

- அக்டோபர் 16, 2022- ஞாயிறு

- அக்டோபர் 18, 2022- கதி பிஹு (கவுகாத்தி)

- அக்டோபர் 22, 2022- நான்காவது சனிக்கிழமை

- அக்டோபர் 23, 2022- ஞாயிறு

- அக்டோபர் 24, 2022- காளி பூஜை/தீபாவளி

- அக்டோபர் 25, 2022- லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை (காங்டாக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்)

- அக்டோபர் 26, 2022- கோவர்தன் பூஜை/பாய் தூஜ்/தீபாவளி/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்)

- அக்டோபர் 27, 2022- பாய் தூஜ்/லட்சுமி பூஜை/தீபாவளி (காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ)

- அக்டோபர் 30, 2022- ஞாயிறு

அக்டோபர் 31, 2022- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/சூர்ய பஷ்டி தலா சாத்/சத் பூஜை (அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி)

21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என வங்கிகள் தெரிவித்துள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது என்றாலும், ஆனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிற இணையச் சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl

How to Make Moroccan Chicken Tagine With Potatoes and Carrots #Tagine

Grilled Keto Pork Tenderloin Recipe #TenderloinRecipe