இயக்குநர் சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு!!253595668


இயக்குநர் சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு!!


விஜயின் சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம். இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதேபோல் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சர்கார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட படங்களிலும் இவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் சமீப காலமாக அதிகம் பணியாற்றி வந்தார்.

இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்தி நடித்துள்ள 1947 என்ற திரைப்படத்திலும் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கலை இயக்குனர் T.சந்தானம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணத்திற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

How to Make Moroccan Chicken Tagine With Potatoes and Carrots #Tagine

Whole30 Fried Chicken and Mashed Potato Bowl with Gravy