பாஜக முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!43367466
பாஜக முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!
பீகார் சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆரம்பத்திலிருந்தே பாஜக மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருந்து வந்தது. மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்பதால் இந்த அதிருப்தி ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை பாஜக ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த கூட்டணி முறிந்தது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். நிதிஷ் குமார் ராஜினாமா அளுநர் பாகு செளகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும் போது, இப்போது நிதீஷ்குமார் ஆர்ஜேடியுடன் இணைந்து ஆட்சியமைப்பார் என்று தெளிவாகச் சொல்லலாம்.
பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முன்னதாக கூறியிருந்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். 2024 மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு இப்போதே பாஜகவிடம் இருந்து விலகுகிற முடிவுக்கு வந்துவிட்டார் நிதிஷ்குமார் எனவும் கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த காட்சிகள் எல்லாம், பீகார் மக்களுக்கு இது எல்லாம் புதிதல்ல. மாநில வரலாற்றின் பக்கங்களைப் பார்த்தால், கடந்த 22 ஆண்டுகளில் இரண்டு முறை நிதிஷ்குமார் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நிதிஷின் இத்தகைய முடிவுகள் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மேற்கொள்ளப்படுவது தான்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நிதிஷ்குமார் பாஜகவில் இருந்து விலகினார். 2005-ல் பாஜகவுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்த நிதிஷ், 2012ம் ஆண்டிலும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோதும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தார். இதன்பிறகு, 2013ல், மோடியை பிரதமர் வேட்பாளராக, பாஜகஅறிவித்தபோது, 17 ஆண்டு கால உறவை, நிதீஷ் குமார் முறித்துக் கொண்டார். இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் நிதிஷ் குமார் கட்சி யாருக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்ப்புகள் இருந்தன. இருப்பினும், திரௌபதி முர்முவை ஜேடியு ஆதரித்தது.
Comments
Post a Comment