சென்னை வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி தங்கத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்..! மீண்டும் அட்டகாசம் ஆரம்பம் சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற கிளையில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களை கட்டிப்போட்டு , 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றனர். சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் சென்னையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வங்கியின் வாடிக்கையாளரான ராணி, அண்ணா நகரைச் சேர்ந்த டேவிட் ஆகியோர் வங்கிக்கு வந்துள்ளனர். பாதி ஷட்டர் மூடப்பட்ட நிலையில் இருந்த வங்கியின் உள்ளே டேவிட் சென்றதும் அங்கு யாரும் இல்லை. ஒரு பெண் உட்பட ஊழியர்கள் மூன்று பேரும் கட்டிப் போடப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாடிக்கையாளர் டேவிட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தகவல் ...