14 மாவட்டங்களில் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! 1126249765


14 மாவட்டங்களில் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!


தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும் (03.06.2022, 04.06.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.06.2022, 06.06.2022, 07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பெரம்பலூர் (பெரம்பலூர்) 4, கெட்டி (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 3, அம்முண்டி (வேலூர்), வேப்பூர் (கடலூர்), கோத்தகிரி (நீலகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), எடப்பாடி (சேலம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, சிற்றாறு (கன்னியாகுமரி), ஆண்டிப்பட்டி (மதுரை), கோவில்பட்டி (திருச்சி), குப்பணம்பட்டி (மதுரை), கரையூர் (புதுக்கோட்டை), வாடிப்பட்டி (மதுரை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

03.06.2022, 04.06.2022: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07.06.2022: தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?289294326

How to Make Moroccan Chicken Tagine With Potatoes and Carrots #Tagine

Whole30 Fried Chicken and Mashed Potato Bowl with Gravy