அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!1090488981
அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
மாஸ்க் மீண்டும்
அதனாலேயே, தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது... அதனாலேயே மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது... மேலும், பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறையும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொற்று அதிகரித்து காணப்படுகிறது.. நேற்று ஒருநாள் மட்டும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது...
பழைய கொரோனா
நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவது குறித்து டாக்டர்கள் சொல்லும்போது, தற்போதைய கொரோனாவிற்கும், முன்பு இருந்த கொரோனாவிற்கு வித்தியாசம் உள்ளது.. பழைய கொரோனா பாதிப்பின்போது மக்கள் அதிகம் உயிரிழந்தனர்... ஆனால், இப்போது இந்த தொற்று பெரிதாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை... கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண பிரச்சனைகளே ஏற்படுகிறது.
டாக்டர்கள் அட்வைஸ்
மருத்துவமனைகளில் கொரோனாவின் தீவிரத்தை தற்போது காண முடியவில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. கொரோனாவால் ஊரடங்கு வருமா என்பதை, மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் வரும் கூட்டத்தை வைத்தே கணிக்க முடியும்.. எனினும், மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மறுபடியும் லாக்டவுன் வருவதற்காக வாய்ப்புக்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன.. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஏதாவது முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
அமைச்சர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார்கள்.. இதனை அடுத்து தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.. ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றாலும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதலை கட்டாயப்படுத்துதல், உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment