Zodiac signs to be aware of!
எச்சரிக்கையாக இருக்கும் ராசிகள்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!
இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன.
சோமாவதி அமாவாசை 2022:
இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன. இந்த முறை அமாவாசை தேதி மே 29, 2022 அன்று மதியம் 02:54 மணிக்கு துவங்கி மே 30, 2022 மாலை 04:59 மணிக்கு முடிவடைகிறது. இதனால் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு சோமாவதி அமாவாசை உஷாராக இருக்க வேண்டும். இருப்பினும், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேளை கிடைக்கும். பண வரவு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலன் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டு. மூத்த சகோதர்கள் உதவுவார்கள். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. அலட்சியம் பல இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதையில் பயணிக்க துவங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய தேவையற்ற முன்கோபத்தை தள்ளி வைத்து விட்டு இன்முகத்துடன் பேசுவது நல்லது.கேட்ட இடத்தில பணம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே அன்னோன்யன் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு வேலை சுமை இருந்து கொண்டே இருக்கும். நினைத்த இடங்களிலிருந்து புதிய செய்திகள் கிடைக்கும். வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் ஏற்றம் காணும் பாக்கியம் உண்டு. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் தானாகவே விலகி சென்று விடுவார்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நபர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். பால்ய நன்பர்களை சந்திப்பீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாக இருக்கும். அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்களின் ஆறுதல் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு, இந்த நாள்மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. வீண், பயம் கவலைகள் வந்து போகும். வழக்கில் நிதானம் அவசியம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.
Comments
Post a Comment