IND vs SA: ‘6 இளம் வீரர்களுக்கு காயம்’…சுயநலமாக சிந்திக்கும் ரோஹித் ஷர்மா: பிசிசிஐ கடும் எதிர்ப்பு?
IND vs SA: ‘6 இளம் வீரர்களுக்கு காயம்’…சுயநலமாக சிந்திக்கும் ரோஹித் ஷர்மா: பிசிசிஐ கடும் எதிர்ப்பு?
கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா டூர், ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணம்:
மேலும் தென்னாப்பிரிக்க தொடரின்போது ஜூலை 15ஆம் தேதி, இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி குழு புறப்பட உள்ளது. இதனால், வேறு வழியே இல்லை. இளம் இந்திய வீரர்களுடன்தான் தென்னாப்பிரிக்க அணி மோதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
6 பேருக்கு காயம்:
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பிசிசிஐ தயாரித்து வைத்துள்ள இந்திய இளம் அணி உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பேருக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது, பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தீபக் சஹாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அஜிங்கிய ரஹானே தசைப் பிடிப்பு பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பிரித்வி ஷாவுக்கு டைப்பாய்ட் காய்ச்சல் இன்னமும் சரியாகவில்லை.
இதனால், புதுமுக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.
அணி மீட்டிங்:
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று இரவு நடைபெற்ற அணி மீட்டிங்கில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், பிசிசிஐ நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். அப்போது சூர்யகுமார் யாதவிற்கான பேக்கப் வீரர் குறித்து பேசியபோது, ரோஹித் ஷர்மா திலக் வர்மாவை பரிந்துரைத்திருக்கிறார். ஆனால், பிசிசிஐ நிர்வாகிகளோ ராகுல் திரிபாதிக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். ஒருசில போட்டிகளில் மட்டும் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவிற்கு ஏன் முன்னுரிமை கொடுக்கிறீர்கள் எனவும் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியில் சூர்யகுமாருக்கான பேக்கப் வீரராக திரிபாதியை சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment