ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
திருத்தணி: திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதில் வழக்கம்போல் நேற்று ஊராட்சி செயலாளர் சரளா, பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பாம்பு ஒன்று நுழைந்திருப்பதாக கூறினர். இதையடுத்து ஊராட்சி செயலாளர் சரளா திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி நிலைய அலுவலர் அரசு இளையராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணிநேர போராட்டத்துக்குப்பின்பு 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் சாக்குப்பையில் பாம்பைபோட்டு காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.