சைபர் க்ரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
சைபர் க்ரைம் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகளவில் சைபர் அட்டாக், மூலம் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பணக்கார்கள் முதல் அப்பாவி மக்கள் வரையிலும் பெரும் நிறுவனங்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட், ரேசர்பே போன்ற முன்னணி நிறுவனங்கள் சைபர் அட்டாக், ஹேக்கிங் மூலம் பெருமளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகிலேயே அதிகச் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI சமீபத்தில் உலகில் சைபர் கிரைம்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இப்பட்டியலில் உலகின் பல நாடுகள் இடம்பெற்று இருக்கும் வேளையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சைபர் குற்றங்கள் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் இணைய மோசடிகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் ஆக ஃபிஷிங் (Phishing) விளங்குகிறது. எஃப்.பி.ஐ அமைப்பின் இணையக் குற்ற புகார் மையம் (IC3) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 மற்றும் 2021-க்கு இடையில், IC3 பெற்ற புகாரின்படி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 18.7 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இழந்துள்ளனர். மேலும் எஃப்.பி.ஐ மொத்தம் 2,760,044 புகார்களைப் பெற்றுள்ளது.
மேலும் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள்தான். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2021-ம் ஆண்டில் மட்டும் 1.68 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர், இதேபோல் 50-வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 1.26 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். இதேவேளையில் 20 வயதில் இருப்பவர்கள் 101.4 மில்லியன் டாலர் இழந்துள்ளதாகத் தெரிகிறது.
இப்பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, கிரீஸ், சீனா, ஸ்பெயின், பாகிஸ்தான், இத்தாலி, மலேசியா, துருக்கி, ஜப்பான், ஆகிய 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
Comments
Post a Comment