துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பைனான்சியரின் தலையை கூவம் ஆற்றில் தேடும் பணி தீவிரம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
சென்னை: மணலியில் பைனான்சியரை தலை, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பைனான்சியரின் தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி, 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (65), திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி லட்சுமி (60). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள். சக்கரபாணி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால், பணத்தை வசூலித்துவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர், மணலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்கரபாணியை தேடினர்.அவரது செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிக்னல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment