திடீரென தடைபட்ட இன்ஸ்டாகிராம் சேவை… பயனர்கள் அவதி!!1543754944
திடீரென தடைபட்ட இன்ஸ்டாகிராம் சேவை… பயனர்கள் அவதி!!
உலக அளவில் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் திடீரென தடைபட்டதால் பயனர்கள் அவதி அடைந்தனர்.
நேற்று இன்ஸ்டாகிராம் பக்கம் பல பயனர்களுக்கு செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. பெரும்பாலான பயனர்களுக்கு முகப்பு பக்கம் மற்றும் தங்களது சுயவிவரக்குறிப்பு பக்கம் தெரியவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
முன்னதாக, நேற்று காலை 9.45 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் செயலிழக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்கு அதிகமான மக்கள் இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, மதியம் 12.45 மணி நிலவரப்படி, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, பெங்களூரு மற்றும் பல முக்கிய நகரங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.
பல முக்கிய நகரங்களில் மட்டுமே இன்ஸ்டா பக்கம் எடுக்கவில்லை என்றும், பல ஊர்களில் இன்ஸ்டா பக்கம் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment