திருப்பதியில் இன்று முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்


திருப்பதியில் இன்று முதல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசன டிக்கெட்


உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக  2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்

இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

Tirupathi

இதற்கிடையில் திருப்பதியில் நேற்று 67,347 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,440 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்ட காம்ப்ளக்ஸ்சில் 3 அறைகளில் இலவச தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். 4 மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Tirupathi

முக்கிய குறிப்பு: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 2 டேஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையின் மூலம் கிடைக்கப்பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நேரில் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl