போலீஸ், வக்கீல், டாக்டர் தான் டார்கெட்..! பலே திருடன் சிக்கியது எப்படி?


போலீஸ், வக்கீல், டாக்டர் தான் டார்கெட்..! பலே திருடன் சிக்கியது எப்படி?


சேலம் டவுன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனை அடுத்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று கடைவீதியில், நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர் போலீஸை கண்டதும் பதறியது போல் மெல்ல பின்னோக்கி நகர தொடங்கினார். அந்த நபரை கவனித்த போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முறணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை வண்டியைவிட்டு இறங்கச்செய்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர் மேட்டூர் பகுதி நங்கவள்ளி அருகே தெப்பகுளம் தெருவை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வந்த இரண்டு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்!

இதனை தொடர்ந்து இளைஞரிடம் போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி இருப்பதும் கண்டறியப்பட்டது.

குறிப்பாக வழக்கறிஞர், மருத்துவர்கள், காவல்துறையினர் என தேர்ந்தெடுத்து அவர்களிடமிருந்து பைக்குகளை கொள்ளையடிப்பார் என தெரியவந்தது. இதுபோன்று இதுவரை மொத்தமாக காவலர் உட்பட 7 பேரிடம் இரண்டு சக்கர வாகனங்களை ராஜா திருடியதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து காவல்துறையினர் 7 இரண்டு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனர். பின்னர் சேலம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சேலத்தில் வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு சொந்தமானது என ஏழு இரண்டு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl