வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?289294326
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை? அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன. அடுத்த மாதம் மட்டும் வார விடுமுறை நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை) 5 உள்ளது. காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி எனத் தேசிய அளவிலான பொது விடுமுறைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள வங்கிக்குச் செல்வதற்கு முன்பாக அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். - அக்டோபர் 1, 2022- வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்) - அக்டோபர் 2, 2022- காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை - அக்டோபர் 3, 2022- துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி) - அக்டோபர் 4, ...