அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!1090488981
அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை! மாஸ்க் மீண்டும் அதனாலேயே, தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது... அதனாலேயே மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது... மேலும், பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறையும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொற்று அதிகரித்து காணப்படுகிறது.. நேற்று ஒருநாள் மட்டும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது... பழைய கொரோனா நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவது குறித்து டாக்டர்கள் சொல்லும்போது, தற்போதைய கொரோனாவிற்கும், முன்பு இருந்த கொரோனாவிற்கு வித்தியாசம் உள்ளது.. பழைய கொரோனா பாதிப்பின்போது மக்கள் அதிகம் உயிரிழந்தனர்... ஆனால், இப்போது இந்த தொற்று பெரிதாக உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை... கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண பிரச்சனைகளே ஏற்படுகிறது. டாக்டர்கள் அட்வைஸ் மருத்துவமனைகளில் கொரோனாவின் தீவிரத்தை தற்போது காண முடியவில்லை என்று மருத்துவர்கள் சொல்...